விழுப்புரத்திலிருந்து காட்பாடி செல்லும் இரயில் பாதையில் திருவண்ணாமலை இரயில் நிலையம் உள்ளது. சென்னையிலிருந்து நேரடிப் பேருந்து வசதி உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். பஞ்சபூதத் தலங்களில் நெருப்புத் தலமாகும். இத்தலத்தில் கிழக்குப் பக்கத்தில் உள்ள வல்லாள கோபுரத்தின் வடபுறத்தில் முருகப்பெருமான் "கம்பத்து இளையனார்" என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார். இந்த கோபுரத்தின் மீது ஏறி உயிரை விடத் துணிந்த அருணகிரிநாதரை குமரக் கடவுள் தடுத்தாட்கொண்டார். "முத்தைத்தரு பத்தித் திருநகை" என்று அடிஎடுத்துக் கொடுத்து திருப்புகழைப் பாடச் செய்தார். வண்ணச்சரபம் தண்டாபாணி சுவாமிகள் பூசித்து வந்த வேல் மற்றும் சேவற் கொடி போன்றவற்றை முருகப்பெருமான் அணிந்து காட்சி தருகின்றார். |